Oct 9, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

ஜோகூர் பாரு, ஜூன்.23-

ஜோகூர் பாருவில் இவ்வாண்டு முதல் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

ஜோகூர் பாரு வீடமைப்புப் பகுதியில் போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 71 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் மற்றும் இதரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 14 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 5 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →