Oct 17, 2026
Thisaigal NewsYouTube

துன் டாயிமின் நல்லுடல், புக்கிட் கியாராவில் நல்லடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் டாயிமின் நல்லுடல், புக்கிட் கியாராவில் நல்லடக்கம்

கோலாலம்பூர், நவ. 13-


முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த துன் டாயிம் ஜைனுதீனின் நல்லுடல், இன்று மாலை 6.06 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் கியாரா 1 இல் உள்ள முஸ்லீம் மையத்து கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பக்கவாதநோயினால் அவதியுற்று வந்த 86 வயது டாயிம் ஜைனுதீன், இன்று காலை 8.21 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் காலமானார்.

டாயிமின் நல்லுடல், புக்கிட் துங்குவில் உள்ள அவரின் இல்லத்திற்கு காலை 11.02 மணிக்கு கொண்டு வரப்பட்டது. டாயிமின் நெருங்கிய நண்பரான துன் மகாதீர் முகமது, அ மைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →