Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மேற்கு ஆசியப் பதற்றம்: எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்
தற்போதைய செய்திகள்

மேற்கு ஆசியப் பதற்றம்: எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஈரான் மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நிலவும் போர் பதற்றத்தைத் தொடர்ந்து, மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் நாட்டின் முக்கிய இலக்குகளில் பாதுகாப்பை அதிகரிக்க அரச மலேசிய போலீஸ் படை உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில போலீஸ் துறைத் தலைவர்கள் மற்றும் துறை இயக்குநர்களுக்கும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள், சொத்துக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தீவிரக் கண்காணிப்பு செலுத்தப்படும். சில தரப்பினரால் இலக்கு வைக்கப்படலாம் என அஞ்சப்படும் வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலை உறுதிச் செய்ய ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, நிலவும் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஐஜிபி தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு