கோலாலம்பூர், ஜூலை.26-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இல்லாதது, மக்களின் ஆதரவைப் பிரதிபலிக்கவில்லை என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் கொறடாவுமான தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வரக்கூடிய சாத்தியம் இல்லாமல் போகலாம். அதற்காக அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளன என்று பொருள்படாது என்று தக்கியுடின் ஹசான் விளக்கினார்.
அன்வாருக்கு மக்களின் ஆதரவு உண்டா, இல்லையா என்பது குறித்து இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதை அன்வாரே நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.








