ஆரவ், அக்டோபர்.18-
பெர்லிஸ் சுல்தான் துவாங்கு சையிட் சிராஜூடின் ஜமாலுலாயில் மற்றும் பெர்லிஸ் அரசி துவாங்கு தெங்கு ஃபௌஸியா தெங்கு அப்துல் ரஷிட் ஆகியோர் பற்றிய அவதூறான கருத்துகள் கொண்ட ஒரு குரல் பதிவு கொண்ட காணொளியைப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் அக்காணொளியைப் பார்த்த பின்னர், நேற்று ஆராவ் அம்னோ இளைஞர் பிரிவு செயலாளர் ஹஸாலான் ஹரோன் அளித்த போலீஸ் புகாரின் பேரில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மொஹ்சின் ரோடி தெரிவித்துள்ளார்.
அக்குரலானது பெர்லிசைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் தலைவரின் குரல் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவலா பகிரப்பட்ட அக்காணொளியில், பெர்லிஸ் அரச குடும்பத்தின் மரியாதையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மொஹ்சின் குறிப்பிட்டுள்ளார்.