கடந்த ஆண்டு பொதுப் பல்கலைக்கழகங்களில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் சேர்ப்பு, 13.5 விழுக்காடாக பதிவாகியுள்ளது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டீன் இன்று நாடாளுமன்றத்தில தெரிவித்தார்.
பொது பல்லைக்கழகங்களில் கடந்த ஆண்டு மாணவர்களின் மொத்த நுழைவு அனுமதி 5 லட்சத்து 51 ஆயிரத்து 082 பேராகும். அந்த எண்ணிக்கையில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மொத்த எண்ணிக்கையில் பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கை 86.5 விழுக்காாடு அல்லது 4 லட்சத்து 76 ஆயிரத்து 796 பேராகும். அதேவேளையில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 286 பேராகும் அல்லது 13.5 விழுக்காடாகும் என்று ஜிபிஎஸ் கூட்டணியை சேர்ந்த புன்சா போர்னியோ உறுப்பினர் டத்தோ வில்லி மோங்கின் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் கலீத் நோர்டின் மேற்கண்டவாறு கூறினார்.








