Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெற்றிப் பயணத்தில் வில்லேந்தும் சிலம்ப வீரர்கள்
தற்போதைய செய்திகள்

வெற்றிப் பயணத்தில் வில்லேந்தும் சிலம்ப வீரர்கள்

Share:

வில்லேந்து சிலம்பு வீரர்களின் வெற்றிப் பயணத்திற்கு அடித்தளம் அமைந்து வருகிறது மலேசிய சிலம்ப கழகம் என்கிறார் அதன் தலைவர் டாக்டர் சுரேஷ்.

ஏற்றம் வேண்டுபவர் ஏறினால்தான் மாற்றம் வரும். மனதை திறந்து வெளியே வா வெற்றி வரும் என்ற கருப்பொருளை தாங்கிய நிலையில் . புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கிலுள்ள அலுவலகத்தில் மலேசிய சிலம்ப கழகம் 2023-2024 ஆம் ஆண்டுக்கான நான்காவது மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 24-16 ஆம் தேதிகளில் சரவாக் கூச்சிங் தளத்தில் SUKMA விளையாட்டுப் போட்டி பிரம்மாண்டமான விழாவாக அரங்கேற்றம் காணவிருக்கிறது. பத்து மாநிலங்களைச் சேர்ந்த நமது சிலம்பக் கலை மாணவர்கள் நிறைய பேர் படையாக பங்கேற்பர்.
ஆகமொத்தம் 350 பேர் பங்கேற்பர். நமது சிலம்பக் கலை மாணவர்கள் களமிறங்கி காரியம் ஆற்றும் போது சிலர்த்தெழும் சிங்கங்களாக திகழ்வர். இத்தகைய சிலம்பம் போட்டி விளையாட்டிற்கு 14 விளையாட்டிற்கான தங்கங்கள் தயார் நிலையில் இருப்பதாக டாக்டர் சுரேஷ் பெருமிதமாக குறிப்பிட்டார்.

சிலம்பம் கழகத்தின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சுக்மா தொழில் நுட்ப தலைவர் ரோட்சியும் கலந்துக் கொண்டார். முக்கியத்துவம் வாய்ந்த மத்திய செயலவை கூட்டத்தில் பல்வேறு கருத்துகளும் பரிமாறப்பட்டது. கழகம் ஆக்ககரமான செயல்படுவதற்கு அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிலம்பம், கபடி விளையாட்டிற்கு சுக்மா போட்டி விளையாட்டு போட்டிகளில் வாய்ப்பு இல்லை என்று அறிவிப்பு சிலம்ப கலைப் பற்றாலர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.

சமூக வளைத்தளங்களில் எதிர்ப்புக்குரல் தான் கிளப்பியது. இப்போது இப்பிரச்சினைக்கு விடியல் பிறந்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னாக் யோ – விற்கும், மஜ்லிஸ் சுக்கான் என்ற விளையாட்டு மன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் சுரேஷ் குறிப்பிட்டார்.

சிலம்பு வீரர்கள் கழகம் தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு உடனடியாக இதன் அங்கத்துவ பலம் பெருமளவில் பெருக வேண்டும். நாளைக்கே நாற்பது வெள்ளி தந்து கழகத்தில் சேருமாறு டாக்டர் சுரேஷ் அன்பு வேண்டுகோள் விடுத்தார். கழகம் மேற்கொள்ள விருக்கும் அடுக்கடுக்கான திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்டும் வண்ணம் இரண்டு லட்சம் வெள்ளி பட்ஜெட் திட்டம் குறித்தும் செயலவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்