கோலாலம்பூர், அக்டோபர்.17-
மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவர் ஒருவர், பல்கலைக்கழகத்தின் 13 ஆவது தங்கும் விடுதியில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது. கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாணவர், பெட்டாலிங் ஜெயா, பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாணவரின் மரணத்தினால் மலாயா பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், பணியாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாணவரின் இறப்புக்கு அவரின் குடும்பத்தினருக்கு தாங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.