Mar 24, 2026
Thisaigal NewsYouTube
“King’s Council வழக்கறிஞரை களம் இறக்குகிறார் முகைதீன் யாசின்”
தற்போதைய செய்திகள்

“King’s Council வழக்கறிஞரை களம் இறக்குகிறார் முகைதீன் யாசின்”

Share:

கோலாலம்பூர், ஜூலை 4-

தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகம் உட்பட நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதற்கு அப்பீல் நீதிமன்றத்தில் தனது சார்பில் ஆஜராகுவதற்கு UNITED KINGDOM-மில் பிரசித்திப்பெற்ற வழக்கறிஞரான “King’s Council” வழக்கறிஞர் ஸ்டீவன் பெரியனை முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் களம் இறக்குகிறார்.

மலாயா உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலாவது “King’s Council வழக்கறிஞரான ஸ்டீவன் பெரியனை, அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தனக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தனது சார்பில் முதன்மை வழக்கறிஞராக முகைதீன் யாசின் நியமித்துள்ளார்.

தம்மை 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்துள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்துள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசின் புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீடு மீதான வழக்கு விசாரணை வரும் ஜுலை 9 ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.

இவ்வழக்கில் சட்டத்தின் அறிவுக்களஞ்சியம் என்று புகழப்படும் பிரபல “King’s Council” வழக்கறிஞர் ஸ்டீவன் பெரியன் ஆஜராகுவதை முகைதீனின் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதாரம், பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவரான ஸ்டீவன் பெரியன் 500 க்கும் மேற்பட்ட பிரபல குற்றவியல் வழக்குகளை கையாண்டவர் ஆவார்.

உயர்தரமான வழக்குகளில் வெற்றியை குவித்தவரான Steven Peran, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர்.

யுடைடெட் கிங்டமில் முதல் நிலை வழங்கறிஞர்களில் ஒருவரான Steven Perian மூலம் தனக்கு எதிரான 23 கோடியே 25 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் குற்றசசாட்டை முழு வீச்சில் எதிர்த்துப் போராடுவதற்கு முகைதீன் யாசின் உறுதிப்பூண்டுள்ளார்.

Related News