சிரம்பான், அக்டோபர்.07-
செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அரசாங்கம் தொடங்கியுள்ள புடி95, சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோல் திட்டத்தில் எண்ணெய் நிலையங்களில் பணம் கட்டிய பின்னர் பிரச்னையை எதிர்நோக்கியவர்கள், அதற்கான ஆதாரமாக ரசீதை பத்திரப்படுத்தும்படி உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சின் நெகிரி செம்பிலான் மாநில இயக்குநர் முகமட் ஸாஹிர் மஸ்லான் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோலை வாங்குவதற்கு பணம் செலுத்திய பின்னர் மைகாட்டை உறுதிப்படுத்துவதில் பிரச்னை அல்லது புடி95 அமைப்பு முறையில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் தாங்கள் செலுத்தியப் பணத்தைத் திரும்பக் கோருவதற்கு ரசீதுகளே ஆதாரமாகும் என்று அவர் விளக்கினார்.
தாங்கள் செலுத்தியப் பணத்தை ரசீதுயின்றி திரும்பக் கோர இயலாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








