Mar 17, 2026
Thisaigal NewsYouTube
தகாத உறவு, உயர் கல்விக்கூட மாணவன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தகாத உறவு, உயர் கல்விக்கூட மாணவன் மீது குற்றச்சாட்டு

Share:

தனது 12 வயது தங்கையுடன் தகாத உறவு கொண்டதாக உயர் கல்விக்கூட மாணவன் ஒருவன், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சசாட்டப்பட்டான்.

22 வயதுடைய அந்த மாணவன், கடந்த 2021 ஆம் ஆண்டில் இத்தகைய தகாத உறவை கொண்டுள்ளான் என்று நீதிபதி Surita Budin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் சிரம்பான், Sikamat- ட்டில் உள்ள ஒரு வீட்டில் அந்த உயர்க்கல்விக்கூட மாணவன் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 B பிரிவின் கீழ் அந்த மாணவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.

Related News