ஜார்ஜ்டவுன், நவம்பர்.17-
பினாங்கு மாநிலத்தில் தற்கொலை புரிந்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை விகிதம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று ஜசெக ஆயர் ஹீத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசஃப் ங் சூன் சியாங் தெரிவித்தார்.
பத்து இளைஞர்களில் ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் நினைப்பில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில சுகாதாரத்துறைத் தரவுகளின்படி இளையோர்களில் குறிப்பாக இளைஞர்களில் 12 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்வதற்கான சிந்தனையில் உள்ளனர். 9.5 விழுக்காட்டினர், அதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளனர். 9.3 விழுக்காட்டினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது என்று ஜோசஃப் ங் விளக்கினார்.








