ஜூலை 28-
நாட்டில், 1998 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி முறையாக உரிமம் பெறாத எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இணைய செய்திகளும் உடனடியாக முடக்கப்படும்.
அக்கூற்றை வெளியிட்ட துணை பிரதமர், DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI, அந்த கடுமையான திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புதிதாக மாற்றியமைக்கப்பட்ட சமூக ஊடகம் மற்றும் இணையச் செய்தி சேவைகள் தொடர்பான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், சமூக ஊடகம் மற்றும் இணையச் செய்தி சேவைகள் தொடர்பான அந்த புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புக்கான அதிகாரம் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய (MCMC) வரம்பிற்கு உட்பட்டது என DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI கூறினார்.
பேராக், SUNGAI SUMUN, BAGAN DATUK பிரிவின் அம்னோ பிரதிநிதிகள் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் அதனை அவ்விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.
இதற்கிடையில், சமூக ஊடகச் சட்டம் சீர்திருத்தம், அரசியல் நோக்கம் என்று அரசாங்கத்திற்கு எதிராக வெளியிடப்பட்டு வரும் கருத்துகளை DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI கடுமையாக மறுத்துள்ளார்.








