May 20, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் கொடியை பறக்கவிட்டதற்காக ஆடவருக்கு சிறை, அபராதம்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் கொடியை பறக்கவிட்டதற்காக ஆடவருக்கு சிறை, அபராதம்

Share:

பொது இடத்தில் இஸ்ரேல் நாட்டின் தேசியக் கொடியை பறக்க விட்ட குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு திரெங்கானு, மாராங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனையும், 500 வெள்ளி அபராதமும் விதித்தது. .

30 வயதுடைய ஹர்மா சுல்ஃபிகா டிராமன் சுல்ஃபிகா டிராமன் என்ற அந்த நபர், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மாராங், புக்கிட் பாயுங், கம்போங் பாடாங் லெபாம் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொது இடங்களில் அல்லது பள்ளி வளாகங்களில் எந்தவொரு நாட்டின் சின்னத்தை தாங்கிய தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கும் மாநில தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் மீது குற்றவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் சுர் அசுரீன் சைனால்கெஃப்லி இத்தண்டனையை விதித்தார்.

Related News