புட்டிப்பால் குடித்துக்கொண்டு இருந்த போது மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக நம்பப்படும் 11 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் நேற்று மலாக்கா, அயெர் மொலெக், பொது குடியிருப்புப்பகுதியில் நிகழ்ந்தது. குழந்தை பாராமரிப்பாளரின் பாதுகாப்பில் விடப்பட்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக தம்மை சைடா என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட 35 வயதுடைய அக்குழந்தையின் தாயார் தெரிவித்தார்.
காலை 11 மணியளவில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த தமது குழந்தையின் உடல் நீலம்பூத்தற்போல் காணப்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றதாகவும் ஆனால் குழந்தை இறந்து விட்டது என்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த மாது தெரிவித்தார். குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தற்போது சவப்பரிசோதனை அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக அந்த மாது குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


