மலேசிய இந்தியர்கள் சமூகவில், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்புப்பணிக்குழுவின் தலைவராக சுங்கை பூலோ பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் அரசியல்வாதியும், மஇகாவின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியுமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் பேரனுமாகிய டத்தோ ரமணன், பிரதமர் துறையின் கீழ் இடம் பெற்றுள்ள மித்ராவின் சிறப்புப்பணிக்குழுத் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவரான 41 வயது டத்தோ ரமணன் தலைமையில் அமைக்கப்பட்ட மித்ரா சிறப்புப்பணிக்குழுவில் மஇகா சார்பில் மேலவை உறுப்பினர் டத்தோ சி. சிவராஜா, ஜ.செ.க. சார்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிரவ், பி.கே.ஆர். சார்பில் சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன் மற்றும் மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


