புத்ராஜெயா, செப்டம்பர்.25-
சரவாக், மீரியில் தேசிய இளைஞர் திறன் கழகத்தில் மாணவன் ஒருவனைப் பகடிவதை செய்த 7 மாணவர்கள், அந்த கழகத்திலிருந்து ஒரு வார காலம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
அந்த 7 மாணவர்களின் இடை நீக்கம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பகடிவதையில் ஈடுபட்டுள்ள அந்த 7 மாணவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தேசிய இளைஞர் திறன் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் தனது கூட்டத்தில் விவாதித்து, முடிவெடுத்ததன் விளைவாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று ஹன்னா இயோ விளக்கினார்.








