போர்ட்டிக்சன், செப்டம்பர்.02-
செயலாக்கம் இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுமாறு சகநாட்டவர்களை நம்ப வைத்து ஸ்கேம் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் சீன நாட்டைச் சேர்ந்த 36 பேர், போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் முகமட் ஃபாரேஸ் ரஹ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சீனப் பிரஜைகள் தங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டு, மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த 36 பேரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. 22 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சீன நாட்டுப் பிரஜைகள், மலேசியாவைத் தளமாகக் கொண்டு ஓன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








