Oct 16, 2026
Thisaigal NewsYouTube

லோரி தடம்புரண்டது, இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் பரிதவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரி தடம்புரண்டது, இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் பரிதவிப்பு

சிலிம் ரீவர், டிச.7-


உணவுப்பொருட்களை ஏற்றிச்சென்ற லோரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை மோதி, தடம்புரண்டதில் லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி ஓட்டுநர் பெரும் அவதிக்குள்ளாகினார்.

இச்சம்பவம், இன்று விடியற்காலை 12.59 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 368.8 ஆவது கிலோமீட்டரில் சிலிம் ரீவர் அருகில் நிகழ்ந்தது.

இதில் ஒரு வங்காளதேசப் பணியாளர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில் உள்ளூர் பிரஜையான 20 வயது லோரி ஓட்டுநர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினார்.

இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பைப்பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள், ஸ்தலத்திற்கு விரைந்து, அந்த லோரி ஓட்டுநரை, ஹைடர்லிக் சாதனத்தின் உதவியுடன் மீட்டனர் என்று பேரா தீயணைப்பு, மீட்புப்படை சபாரோட்ஷ நோத்ர அகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →