Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சாலை விதிமுறைகளை ​மீறும் குற்றவாளிகளை கொண்டாட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

சாலை விதிமுறைகளை ​மீறும் குற்றவாளிகளை கொண்டாட வேண்டாம்

Share:

சா​லைவிதிமுறைகளை ​மீறும் குற்றவாளிகளை தலையில் வைத்து கொண்டாட வேண்டாம் என்று மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனமோட்டும் லைசென்ஸின்றி, சாலை வரி சிட்டையின்றி, சாலை விதிமுறைகளை ​மீறி வாகனத்தை செலுத்தும் வாகனமோ​ட்டிகள் அதற்கான தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்ற மனோநிலையை ​மலேசியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று சாலைபோக்குவரத்து இலாகா அறிவுறுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நெகிரி செம்பிலான், ​நீலாயில், சாலைவரி சிட்டையின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய பூட் பான்டா உணவு விநியோகிப்பாளரின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அவரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த சாலை போக்குவரத்து இலாகா அமலாக்க அதிகாரிகள், பொது மக்களால் தூற்றுப்பட்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் தனது பூட் பான்டா பெட்டியை முதுகில் சுமந்து கொண்டு சாலையோரமாக நடந்து செல்லும் அந்த உணவு விநியோகிப்பாளரின் நிலையைக் கண்டு , பரிதாபப்பட்டு, அவரை ஒரு நாயகரைப் போல் ச​​மூக வலைத்தளங்களில் போற்றப்பட்டு வரும்​ பொது மக்களின் மனோநிலையையும் அவ்விலாகா கேள்வி எழுப்பியுள்ளது.

சம்பந்தபட்ட உணவு விநியோகிப்பாளர், தொடர்ந்து மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால் அவருக்கும் பாதுகாப்பு இல்லை. அவரின் மோட்டார் சைக்கிளினால் மோதப்படக்கூடிய நபர்களுக்கும் குறிப்பாக பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு சாலை வரி சிட்டையில்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அவர் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்துவதை அனுமதிக்க முடியுமா என்று சாலை போக்குவர​த்து இலாகா கேள்வி எழுப்பியுள்ளது. 

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது