ஜார்ஜ்டவுன், ஜூலை.29-
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்களைச் சட்டவிரோதமாக வெளியேற்றுவது, நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பது முதலிய செயல்களுக்கு விமான நிலையத்தில் செட்டிங் முறையை அமைத்ததாக நம்பப்படும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட குடிநுழைவு அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அந்த அனைத்துலக விமான நிலையத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அவ்விரு அதிகாரிகளும் பிடிபட்டனர் என்று எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அந்த இரண்டு அதிகாரிகளும் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.








