Apr 30, 2026
Thisaigal NewsYouTube
சுக்மா 2026: சிலாங்கூர் அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சுக்மா 2026: சிலாங்கூர் அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை

Share:

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டுப் போட்டிகளுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிலாங்கூர் அரசு பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில், முதலில் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட், தற்போது 50 மில்லியன் ரிங்கிட்டாகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்படும் என்றும், சிப்பாங், பன்னாட்டு தடமில் நடைபெறவிருந்த தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி பேசுகையில் , இந்த பட்ஜெட் குறைப்பு போட்டிகளின் தரத்தையோ அல்லது தொழில்நுட்ப அம்சங்களையோ எந்தவிதத்திலும் பாதிக்காது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சுக்மாவின் நிர்வாகச் செலவுகள் குறைக்கப்பட்டாலும், வீரர்களின் திறமையை வெளிப்படுத்தச் சிறந்த களமாக இந்தப் போட்டிகள் அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று நஜ்வான் ஹலிமி குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி