Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேசிய தின சின்னம் மற்றும் கருப்பொருள் அறிமுக தொடக்க விழா
தற்போதைய செய்திகள்

தேசிய தின சின்னம் மற்றும் கருப்பொருள் அறிமுக தொடக்க விழா

Share:

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு அதன் சின்னம் மற்றும் கருப்பொருள் அறிமுக தொடக்க விழா, இன்று மே 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் கோலாலம்பூர், எஸ்பிலனேய்ட் டாமான் கே.எல்.சி.சி யில் நடைபெற்றது.

இவ்விழாவை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சுர் ஃபாமி ஃபட்சில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு அதன் கருப்பொருளை அறிவித்து, சின்னத்தையும் வெளியிட்டார்.

‘மடாணி மலேசியா ஒற்றுமையின் உறுதிப்பாடு நம்பிக்கையை நிறைவேற்றும்’ என்ற கருப்பொருளை அவர் அறிவித்ததுடன், தேசிய கோட்பாடு உறுதிமொழியை ஓதுவதற்கு, கைகளை உயர்த்துகின்ற வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட சின்னதையும் வெளியிட்டுள்ளார்.

Related News