திறனும், ஆற்றலும் நிறைந்த மலேசிய இளம் விளையாட்டாளர்கள், அனைத்துலக அரங்கில் மலேசியாவின் புகழை மணக்கச் செய்ய ஊக்குவிக்க வேண்டுமே தவிர ஆடை கோட்பாடு என்ற ஒரு குறுகிய வட்டத்தில் அவர்களின் திறனை அழுத்திவிடக்கூடாது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக்கொண்டார்.
ஜிம்னாஸ்டிக் போட்டியில் பெண் வீராங்கனைகள் திறன் வாய்ந்து இருந்தாலும் அவர்கள் அரை குறை ஆடையுடன் காட்சி அளிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பாஸ் தலைமையிலான திரெங்கானு அரசாங்கம் அனுமதித்து இருப்பது தொடர்பில் ஹன்னா இயோ கருத்துரைத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் திரெங்கானு மாநில ஜிம்னாஸ்டிக் சங்கத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார். பெண் விளையாட்டளார்களின் திறனைதான் பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் ஆடையை அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








