சுபாங் ஜெயா, அக்டோபர்.28-
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் விசாரணை என்ற பெயரில் 22 வயது இளம் பெண்ணை மானபங்கம் செய்ததாக போலீஸ்காரர் ஒருவர் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது நுரி பாஹ்ருன் என்ற அந்த போலீஸ்காரர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் புகைப்படம் எடுக்கும் அறையில் இந்த ஒழுங்கீனச் செயலைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








