மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், குறித்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையாததால், கோலாலம்பூருக்குத் திரும்ப வேண்டிய 200 க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு நேற்று பின்னிரவு 1.45 மணிக்கு, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை அனைத்தும் முடித்து தயார் நிலையில் இருந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் புறப்படவில்லை. விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று காலை 7 மணி வரை விமானம் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனப் பணியாளர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈட்டுப்பட்டனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH180 விமானம், இயந்திரக் கோளாரினால் மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்ப வேண்டிய நிலையில், சென்னைக்கான விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்


