கோலாலம்பூர், ஜாலான் டூத்தா, புக்கிட் துங்குவில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில், மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட அரசு சார்பு ஏஜென்சிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தின.
பொதுப் பணி இலாகா, கனிம வள இலாகா உட்பட நிலச்சரிவு தொடர்புடைய அரசாங்க ஏஜென்சிகளின் பொறுப்பாளர்கள் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கோலாலம்பூர், எஸ்.பி.ஆர்.எம். கட்டடத்திற்கு அருகில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில், அந்த ஆணையத்தின் கட்டடத்தில் இருந்த 76 பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


