பெந்தோங், ஜூலை.12-
விபத்தில் சம்பந்தப்படும் பேருந்து ஓட்டுநர்கள் மீதான விசாரணை முடிவடைந்து, அவர்கள் குற்றம் இழைத்துள்ளனர் என்று கண்டறியப்பட்டால் மட்டுமே அவர்களின் பொது வாகனங்களுக்கான சேவை உரிமமான பிஎஸ்வி லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, பேருந்து ஓட்டுநர்கள் கடும் குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டால் மட்டுமே அவர்களின் பிஎஸ்வி லைசென்ஸ் பறிக்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
விபத்தில் சம்பந்தப்படும் பேருந்து ஓட்டுர்களின் நலன் மற்றும் அவர்களின் உரிமை புறக்கணிக்கப்படாமல், அவர்கள் மீதான விசாரணை நேர்மையாக நடத்தப்படும். அதே வேளையில் சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








