Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கிள்ளானில் 6 கார்களுக்கு தீயிடப்பட்டன
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் 6 கார்களுக்கு தீயிடப்பட்டன

Share:

மனநல பாதிப்புக்கு ஆளானவர் என்று நம்பப்படும் நபரால் தீயிடப்பட்டதாக கூறப்படும் 6 கார்கள் தீயில் அழிந்தன. இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கிள்ளான், பண்டர் புக்கிட் திங்கி, ஜாலான் பத்து நிலம் 3 இல் நிகழ்ந்தது. கார்கள் கொழுந்து விட்டு எரிவதை அணைக்க முற்பட்டதாக நம்பப்படும் பட்டறை பணியாளர் ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பபதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு,மீட்புப்படை உதவி இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமது ஜைன் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறுவர் கொண்ட தீயணைப்புப்படையினர் சுமார் அரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்திய போதிலும் இத்தீ சம்பவத்தில் நிசான் சென்ட்ரல், பெரோடுவா பெஸ்ஸா, ஆக்ஸியா, மைவி, மஸ்டா மற்றும் புரோட்டான் சாகா ஆகிய 6 கார்கள் முற்றாக அழிந்ததாக முகமதுல் எஹ்சான் குறிப்பிட்டார்.

Related News