ஈப்போ, ஆகஸ்ட்.07-
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டை எதி்ர்நோக்கிய இரு இந்திய ஆடவர்களை அக்குற்றச்சாட்டிலிருந்து ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
35 வயது என். சரவணன் மற்றும் 33 வயது எஸ். வேணுகோபால் ஆகிய இருவரும் அக்குற்றஞ்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இரவு மணி 8.45 மணியளவில் ஜாலான் ஹாஜி முகமட் அலி, தாமான் ஆச்சே ஜெயா, சித்தியவான், பேராக் எனும் முகவரியில் வில்டோன் ஹோட்டல் அருகில் 39.9 கிராம் போதைப் பொருளை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அதே இடத்தில் 20.5 கிராம் எடைக்கொண்ட மார்ஃபின் போதைப்பொருளை வைத்திருந்ததாக அந்த இருவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு் கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1959 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.








