சுங்கை பாக்காப், டிசம்பர்.31-
பினாங்கு மாநிலம், சுங்கை பாக்காப் பகுதியில் நேற்று, உணவகம் ஒன்றில், ஆயுதமேந்திய முகமூடிக் கும்பல் ஒன்று, நடத்திய தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில், தாக்குதலுக்கு உள்ளான 59 வயதான ஆடவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த உணவகத்தில், மூவரும் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகின்றது.
இவ்வழக்கானது, கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பினாங்கு போலீஸ் தலைவர் அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.








