May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்

Share:

Melaka, Jalan Taming Sari - யில் தனது கணவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று MPV வாகனத்துடன் மோதியதில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட 27 வயது Puteri Nur Iman Hamidun மற்றும் அவரின் கணவரான 28 வயது Muhammad Helmi Abdul Razak ஆகிய இருவரும் Pengkalan Rama - விலிருந்து Melaka மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Christopher Patit தெரிவித்தார்.

சம்பவ இடத்தில், Jalan Mawar - ரில் இருந்து Pengkalan Rama - வை நோக்கி MPV ரக கார் ஒன்று வலதுப்புறம் திரும்பிய வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த அவ்விருவரும் அதை தவிர்க்க முயற்சித்து தோல்வியுற்ற நிலையில் விபத்துக்குள்ளாகியதாக Christopher Patit கூறினார்.

சம்பந்தப்பட்ட கர்ப்பிணி பெண் பலத்த காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரின் கணவர் உட்பட MPV ரக காரில் பயணித்த 41 வயது மாதுவும் காயத்துடன் உயிர் தப்பியதாக Christopher Patit மேலும் இன்று தகவல் அளித்தார்.

Related News