Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேலிய அடக்குமுறைக்கு ஆளான 9 மலேசிய தன்னார்வலர்களுக்கு பிரதமர் அன்வார் கைப்பேசி அன்பளிப்பு!
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலிய அடக்குமுறைக்கு ஆளான 9 மலேசிய தன்னார்வலர்களுக்கு பிரதமர் அன்வார் கைப்பேசி அன்பளிப்பு!

Share:

சிப்பாங், அக்டோபர்.12-

காஸாவுக்கான மாந்தநேய உதவிகளைக் கொண்டு சென்ற கடல் பயணத்தின் போது இஸ்ரேலிய இராணுவத்தால் தாக்கப்பட்டு, பொருட்கள் பறிக்கப்பட்ட ஒன்பது Freedom Flotilla Coalition மலேசியத் தன்னார்வலர்களுக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாக்குறுதியின்படி கையடக்கத் தொலைபேசிகளை வழங்கினார். இஸ்ரேலியப் படையினரால் அவர்களின் தொலைபேசிகள் கடலில் வீசப்பட்டதாகவும், அடிக்கப்பட்டு, கடத்தப்பட்டதாகவும், மலேசியக் கொடி உட்பட அவர்களின் தனிப்பட்ட உடைமைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாகவும் கூறப்படும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து இந்தச் சிறப்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

பிரதமர் சார்பில் அவரது அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தன்னார்வலர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மாந்தநேயப் பணியில் ஈடுபட்ட தேசிய வீரர், வீராங்கனைகளின் துணிச்சலைப் பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News