பினாங்கில் நான்கு ஆடவர்களை கைது செய்தது மூலம் போதைப்பொருள் தயாரிப்புக்கூடம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் மூலம் 18 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்துள்ளார்.
புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் உளவுத்துறையின் தகவல் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை .இரவு 9 மணியளவில் பினாங்கில் திமூர்,லாவுட், பாராட் டாயா ஆகிய மாவட்டங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இந்த தொடர் சோதனை நடவடிக்கையில் மூளையான இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் தஞ்சோங் தோக்கோங் கில் 27 வயது ஆடவர் கைது செய்யப்பட்டது மூலம் பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மற்ற நபர்கள் பிடிபட்டனர் என்று டத்தோ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.








