Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களில் சிறுநீரகம்/ 5 லட்சம் வரை விற்பனையா?
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுநீரகம்/ 5 லட்சம் வரை விற்பனையா?

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05-

சமூக ஊடங்களில் மனிதர்களின் முக்கிய உறுப்பான சிறுநீரகம் , 10 ஆயிரம் வெள்ளி முதல் 5 லடசம் வெள்ளி வரை விற்பனை செய்யப்பட்டு வரும் செயலுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதார மருத்துவ நிபுணர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

சிறுநீரக விற்பனை தொடர்பாக சமூக ஊடங்களில் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பாகங் மாநில சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் டாகடர் சனால் உமர் தெரிவித்துள்ளார் .

''சிறுநீரக நன்கொடையாளர்களை தேடுகிறோம் '' என்ற தலைப்பில் முகநூலில் கும்பல் என்று பகிரங்கமாக விளம்பரம் படுத்தி வருகிறது .இது உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் சுகாதார உயர் அதிகாரி , அரசாங்கத்தையும் ,போலீசாரையும் கேட்டுக்கொண்டுள்ளார் .

இதில் வேடிக்கையாகவும் ,கடுமையாகவும் கருத வேண்டிய விஷயம் என்னவென்றால் , சிறுநீரக மாற்றம் என்பது மிக எளிதான காரியம் அல்ல . பொருத்தமான சிறுநீரகத்தை தேர்வு செய்வதற்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதுடன் இதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் மிக முக்கியமாகும் என்று அவர் தெளிவு படுத்தினார்.

சிறுநீரக விற்பனையும் ,அதன் பரிமாற்றமும் திரைப்படங்களில் பார்க்கின்ற காட்சிகளைப் போல அல்ல என்பதையும் அவர் நினைவுறுத்தினார். ஆபத்தையும், அச்சத்தையும் விளைவிக்கும் தன்மையிலான இது போன்ற விளம்பரமும் , விற்பனையும் உடனடியாக முடக்கப்பட வேண்டும் . இதனை சுகாதார அமைச்சும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் சனால் உமர் கேட்டுக்கொண்டார் .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

சமூக ஊடகங்களில் சிறுநீரகம்/ 5 லட்சம் வரை விற்பனையா? | Thisaigal News