கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
நாட்டில் உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்கும் முயற்சியில், இறந்தவரின் உறவினர்களிடமிருந்து சம்மதம் பெறுவது முக்கியச் சவாலாக உள்ளது என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
பலர் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தாலும், இறுதி முடிவுக்கான அதிகாரம் நெருங்கிய உறவினர்களிடமே உள்ளது. இந்த ஆண்டின் 'உறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தின்' கருப்பொருள், ‘Derma Organ: Warisku, Hormati Ikrarku’ - 'என் உறுதிமொழியை மதித்து உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்' என்பதாகும். கடந்தாண்டு வரை, உடல் உறுப்பு தானம் பெறக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10,000-க்கும் அதிகமாக உள்ளது. இதில் பெரும்பாலானோர் சிறுநீரக நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.








