ஜோகூர் பாரு, ஜூலை.18-
பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த மாணவர்களில் 11 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று காலை 7.01 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் அப்துல் சமாட்டில் நிகழ்ந்தது.
சாலையில் சாக்கடை நீர் குழியில் பள்ளி வேன் மோதியதில், நிலைத்தன்மை இழந்து கவிழ்ந்தாகக் கூறப்படுகிறது. சம்பவம் நிகழும் போது, அந்த வேனில் அதன் ஓட்டுநர் உட்பட மொத்தம் 17 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமுற்ற 11 பேர், ஜோகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.








