May 4, 2026
Thisaigal NewsYouTube
"நான் தலைமறைவாகவோ, தப்பியோடவோ இல்லை" - இங்கிலாந்தில் இருந்து ஜேம்ஸ் சாய் தகவல்
தற்போதைய செய்திகள்

"நான் தலைமறைவாகவோ, தப்பியோடவோ இல்லை" - இங்கிலாந்தில் இருந்து ஜேம்ஸ் சாய் தகவல்

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் முன்னாள் சிறப்புப் பணி அதிகாரி ஜேம்ஸ் சாய், தான் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார்.

தேடப்படும் நபராக தன்னைப் பற்றி பொதுவெளியில் பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, அதற்கு முன்பாக, எந்த ஒரு அதிகாரப்பூர்வ வழியிலும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் தலைமறைவாகவோ, தப்பியோடவோ இல்லை என்பதை ஜேம்ஸ் சாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனது ஷா ஆலம் வீட்டு முகவரியை பொதுவில் வெளியிட்டுள்ள SPRM, அதன் மூலம் தனது பெற்றோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஜேம்ஸ் சாய், அங்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

SPRM முறையான வழியில் விசாரணை நடத்தினால், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார்.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்