Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கடல் வழியாக ஊடுருவ முயற்சி: பூலாவ் சாயாக் அருகே 37 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

கடல் வழியாக ஊடுருவ முயற்சி: பூலாவ் சாயாக் அருகே 37 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

கோலா கெடா, மார்ச்.01-

மலேசியக் கடலோரக் காவல் படையும் கடல்சார் காவல்துறையும் இணைந்து நடத்திய சோதனையில், கோலா மூடா, பூலாவ் சாயாக் அருகே சட்டத்திற்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மியன்மார், வங்காளதேசம், தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என பெர்லிஸ், கெடா மாநிலக் கடலோரக் காவல் படை முதல் நிலைத் தளபதி ரொம்லி முஸ்தஃபா தெரிவித்தார்.

இவர்கள் ஒவ்வொருவரும் இடைத்தரகர்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் பணம் கொடுத்து, அதிவேகப் படகு மூலம் அண்டை நாட்டிலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முயன்றுள்ளனர். ஊடுருவல்காரர்களைக் கரையில் இறக்கி அழைத்துச் செல்லக் காத்திருந்த மூன்று வாகனங்களையும், அதற்குத் துணையாக இருந்த இரண்டு வங்காளதேச ஆடவர்களையும் அதிகாரிகள் அதே இடத்தில் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காகக் குடிநுழைவுச் சட்டம், ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு