207 பேர் பலி
இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 207 பேர் பலியாகியிருப்பதுடன் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் பாலசோர் அருகில் நிகழ்ந்தது. 18 க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து உருகுலைந்து கிடப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கிவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த மிக கோரமான ரயில் விபத்து இதுவென வர்ணிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயில், மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








