Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சீன வாக்காளர்களை கவர்கிறார் ஹுசைன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீன வாக்காளர்களை கவர்கிறார் ஹுசைன்

குளுவாங் , செப்டம்பர் 17-

வரும் 28 ஆம் தேதி நடைபெற்விருக்கும் ஜோகூர், மஹ்கொத்த சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தலையொட்டி தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் ,பாரிசான் நாசினால்

வேட்பாளர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா, சீன வாக்காளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

சீனப்பள்ளியில் படித்தவரான சையத் ஹுசைன் தனது அசத்தலான , ஒய்யாரப் பெச்சினால் , மஹ்கொத்த தொகுதியில் உள்ள சீன வாக்காளர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

இலையுதிர் காலத்தில் சீனப்பெரும் மக்களின் , சே லுவான் கோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சீன மொழியை உரையாற்றிய சையத் ஹுசைன், சீன சமுதாயத்தைச் செர்ந்த மூத்த வாக்காளர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →