Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆசியானை ஆதரிக்கவும், நல்லுறவை வலுப்படுத்தவும் அன்வார் திமோர்-லெஸ்டேவுக்கு பயணம்!
தற்போதைய செய்திகள்

ஆசியானை ஆதரிக்கவும், நல்லுறவை வலுப்படுத்தவும் அன்வார் திமோர்-லெஸ்டேவுக்கு பயணம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

திமோர்-லெஸ்டே ஜனநாயகக் குடியரசுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்நாட்டு பிரதமர் கெய் ராலா ஸானானா குஸ்மாவோ விடுத்த அழைப்பின் பேரில், அங்கு சென்றுள்ள அன்வார், இச்சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆசியானின் 11-ஆவது உறுப்பினரான திமோர் லெஸ்டேவின் தயார் நிலைகளை ஆதரிக்கும் நோக்கில் அன்வார் இப்பயணத்தை மேற்கொள்வதாகவும், அவருடன் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் ஆகியோரும் உடன் செல்வதாகவும் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

Related News