Apr 14, 2026
Thisaigal NewsYouTube
மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

Share:

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழ்நிலையை குறுகிய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தவோ அல்லது அதனை பரபரப்பாக்கவோ கூடாது என மேன்மை தங்கிய பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அரசியல் தலைவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக மற்றும் வணிகத் தலைவர்கள் அனைவரும் பொதுவான கருத்து ஒருமைப்பாட்டை அடைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் பொறுப்புடன் நடந்து கொண்டு, சமுதாய ஒற்றுமையை காக்கும் முயற்சிகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், எதிர்காலத்தில் உருவாகவுள்ள பொருளாதார சவால்களை சமாளிக்க அனைவரும் ஒன்றுபட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அரசருக்கும் நாட்டிற்கும் உண்மையுடன் இருந்து, மக்களின் நலனையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் நஸ்ரின் முய்ஸுடின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயல்பட்டால் தான், தற்போதைய கவலைக்கிடமான சூழ்நிலையை எதிர்கொண்டு பயனுள்ள தீர்வுகளை உருவாக்கி, அதன்மூலம் நாட்டின் நிலைத்தன்மையும் மக்களின் நலனையும் உறுதி செய்ய முடியும் என்று நேற்று நடைபெற்ற மாநில சட்டமன்ற தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்