Jan 11, 2026
Thisaigal NewsYouTube
சொகுசு விடுதி நீச்சல் குளத்தில் விபரீதம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு சிறுவர்கள்!
தற்போதைய செய்திகள்

சொகுசு விடுதி நீச்சல் குளத்தில் விபரீதம்: மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு சிறுவர்கள்!

Share:

பாலிக் பூலாவ், ஜனவரி.11-

பினாங்கு, பாயான் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 42-வது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில், இன்று காலை ஏழு வயது சிறுவனும் சிறுமியும் மூழ்கி மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காக வந்திருந்த இந்தச் சிறுவர்கள், குழந்தைகளுக்கான குளத்திலிருந்து பெரியவர்களுக்கான குளத்திற்குச் சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளதோடு, அந்தச் சமயத்தில் அங்கு பாதுகாப்புப் பணியாளர்கள் எவரும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பாராட் டாயா மாவட்டக் காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அனுவால் அப்துல் வாஹாப் தெரிவித்தார்.

தற்போது ஒரு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடி வரும் நிலையில், மற்றொரு குழந்தை சுயநினைவு திரும்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் பெற்றோரின் அல்லது விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் ஏதும் உள்ளதா என்பது குறித்து 'அலட்சியத்தால் விளைந்த விபத்து' என்ற கோணத்தில் காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News