Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

டிச. 8-

அரசு ஊழியர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்றும், இது தற்போது ஊழியர்களின் செயல்திறனை மையமாகக் கொண்ட பொது சேவை ஊதிய அமைப்பு எனப்படும் SSPA மூலம் தொடரும் என்றும் பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் காங்கிரஸ் எனப்படும் Cuepacs இன் பொதுச் செயலாளர் Abdul Rahman Mohd Nordin தெரிவித்தார்.

அவர்கள் இதைச் செய்யத் தவறினால், தமது தரப்பு முதல் இரண்டு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பும் எனவும் Abdul Rahman , FMT இடம் கூறினார்.

நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வைக்க வேண்டும் என்று PKR கட்சியின் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் Wong Chen வலியுறுத்தினார்.

நீதிபதிகள் அரசு ஊழியர்கள், குறிப்பாக அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களும் அவர்களது துணைவர்களும், வெளிப்படைத்தன்மையை அதிகரித்து நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று Wong Chen பரிந்துரைத்தார்.

இந்தப் பரிந்துரையை ஆதரித்த Abdul Rahman, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதுதான் வெளிப்படைத்தன்மை. இது வதந்திகளைத் தடுக்கும். ஒருவர் சிறிய சம்பளத்தில் பெரிய பங்களாவை வைத்திருந்தால், அது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →