மலாக்கா, செப்டம்பர்.17-
மலாக்கா, ஜாலான் இண்டஸ்டிரி ரும்பியாவில், நேற்று, கார் ஒன்றில் 2 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் மற்றும் சியாபு வகை போதைப் பொருட்களுடன் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான அந்த ஆடவரின் ஹாண்டா ஜாஸ் இரகக் காரிலிருந்து, 1500 பிளாஸ்டிக் பைகளில் 2 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் வகை போதைப் பொருளும், 100 பிளாஸ்டிக் பைகளில் 96 கிராம் சியாபு வகை போதைப் பொருளும் கைப்பற்றப் பட்டதாக அலோர் காஜா மாவட்ட காவல்துறையின் நடப்பு தலைமை டிஎஸ்பி அஸ்ருல் முகமட் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப் பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 35,000 மலேசிய ரிங்கிட் என்றும் அஸ்ருல் முகமட் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரியும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








