Dec 16, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் இருந்து ஸலேஹா நீக்கம் குறித்து விளக்கம்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் இருந்து ஸலேஹா நீக்கம் குறித்து விளக்கம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.16-

கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து தாம் நீக்ககப்பட்டது தொடர்பில் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸலேஹா முஸ்தஃபா விளக்கம் அளித்துள்ளார்.

சிலாங்கூர், செகிஜாங் எம்.பி.யான டாக்டர் ஸஹேஹா, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒற்றுமை அரசாங்கம் அமைந்த போது நாட்டின் முதலாவது பெண் சுகாதார அமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.

பிரதமர் மேற்கொண்ட இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தில் அவர் பிரதமர் துறை அமைச்சராக இலாகா மாற்றப்பட்டார்.

ஆனால், பிரதமர் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவும், நாட்டின் நலனை முன்னிறுத்தக்கூடியதாகும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்றரை ஆண்டுகள் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கிய பிரதமருக்கு டாக்டர் ஸலேஹா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News