கோல பிலா, ஆகஸ்ட்.11-
பாகிஸ்தான் ஆடவரை மடக்கிக் கொள்ளையிட்டதாகக் குடிநுழைவு அதிகாரி ஒருவர், நெகிரி செம்பிலாான், கோல பிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
38 வயது முகமட் நாஸ்ருல் முகமட் யாசின் என்ற அந்த குடிநுழைவு அதிகாரி கடந்த ஜுலை 11 ஆம் தேதி ரெம்பாவ், கம்போங் மிக்கு பிண்டாவில் பாகிஸ்தான் ஆடவரை மடக்கி கைப்பேசி, கடப்பிதழ், 440 ரிங்கிட், தட்ச் என் கோவில் இருந்த 210 ரிங்கிட் எஞ்சியப் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








