வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரவிருப்பதாக கூறப்படும் 200 ஆன்லைன் தூதர்களின் பணிக்குறித்து விரைவில் ஆராயப்படும் என்று தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.
கடந்த வாரம் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming அறிவித்திருந்த இந்த முன்முயற்சியை தாம் வரவேற்பதாக Fahmi Fadzil தெரிவித்தார்.
இருந்த போதிலும் இதுக்குறித்து முழுமையான விளக்கமும் தகவலும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடமிருந்து கிடைக்க பெறவில்லை என்பதையும் Fahmi Fadzil அறிவித்தார்.
மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் தமது தரப்பு உறுதியாக இருப்பதுடன் இந்த விவகாரம் குறித்து விரைவில் அமைச்சரிடம் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும் ஆன்லைனில் போலி செய்திகளை எதிர்த்து போராடுவதற்கும் 200 ஆன்லைன் தூதர்களை பணிக்கு நியமிப்பதற்கான அவசியத்தை குறித்து சிறப்பு விவகார துறையின் முன்னாள் இயக்குநர் Puad Zarkashi எழுப்பிய கேள்விக்கு Fahmi Fadzil பதிலளித்தார்.








