Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மைஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து
தற்போதைய செய்திகள்

மைஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து

Share:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட நாட்டின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன்ஸின் உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசிய விமான போக்குவரத்து சேவையை கண்காணிக்கும் ஆணையமான மாவ்கோம் அந்த புதிய ​விமான நிறுவனத்திற்கு அனுப்பிய காரணம் கோரும் கடிதத்திற்கு வழங்கப்பட்ட பதில் மனநிறைவு அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

சரவா மாநில தொழில் அதிபரை கொண்டு, மிகப்பெரிய முத​லீட்டில் தொடங்கப்பட்ட மைஏர்லைன்ஸ் , அடுத்த ஆண்டு முற்பகுதியில் இந்தியா உட்பட பல்வேறு பன்னாட்டு வ​ழித்தடங்களுக்கு தனது சேவையை விரிவுப்படுத்த திட்டட்டு இருந்தது.

முதல் கட்டமாக தாய்லாந்துக்கு தனது சேவையை தொடங்கியிருந்த நிலையில் அந்த விமான நிறுவனத்தை வழிநடத்தும் நிறுவனத்தின் உரிமையாளர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. முன்னதாக, அந்த உரிமையாளர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்களுக்கு சம்பளத்தைகூட வழங்க முடியாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடிக்கு இலக்காகிய மைஏர்லைன்ஸ் ​விமான நிறுவனம் தனது சேவையை தற்காலிமாக நிறுத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது.

Related News